வணக்கம்

செவ்வாய், 6 அக்டோபர், 2015

பேரூந்துக்கள் வழி அனுமதிப்பத்திரம் இல்லாத சேவையில் ஈடுபடுத்த தடை

போக்குவரத்து வழி அனுமதிப்பத்திரம் இன்றி பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தவேண்டாம்…
சட்ட நடவடிக்கை ஆரம்பம் என்கிறார் – வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்…

வடக்கு மாகாணத்துக்குள் பல பேரூந்துகள் உரிய முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறாமல் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தெரியவருகின்றது.

குறித்த அனுமதிப்பத்திரங்கள் இன்றி தங்கள் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துகின்றவர்கள் தயவுசெய்து தங்களது சட்ட முரணான சேவையினை நிறுத்துமாறு வடக்கு போக்குவரத்து அமைச்சர் எச்சரித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில் இந்த நாட்டில் ஒரு நிமிடமேனும் சட்டம் அமுல்ப்படுத்தப்படமாட்டாது என்று கூறப்படுமானால் இந்த நாடே நரகமாகிவிடும். சட்டத்தினை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள் ஆகவே ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தினை கடைப்பிடித்து தங்களது தொழில்களை சட்டத்திற்கு அமைவாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும், இல்லையேல் சட்டம் தனது கடமையை சரியாக செய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த வழி அனுமதிப்பத்திரம் இல்லாமல் சேவையினை வழங்குவோர் யாரேனும் இருப்பின் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து என்னுடன் தொடர்பை ஏற்ப்படுத்துவதன் மூலம் மத்திய அமைச்சருடன் கலந்துரையாடி வெளி மாகாணங்களுக்கான வழி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பில் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக