மது போதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வேறு இடத்து பொலிசார் கொடுத்த தர்ம அடியில் அவர்கள் ஓடித்தப்பியுள்ளார்கள்.
ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி சண்டையிட்டுக் கொண்டு நின்றார்கள்.
இதனால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதுடன் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
இந்த நேரத்தில் வேறு இடத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் கடமைக்கு செல்வதற்காக அந்த இடத்திற்கு வந்த போது நிலமையை உணர்ந்துள்ளார்.
பொது மக்கள் இவர்களின் சண்டை காரணமாக போக்குவரத்து செய்ய முடியாது நிற்பதை உணர்ந்து சண்டையிட்டவர்களுக்கு வழங்கிய தர்ம அடியைத் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஒடித்தப்பியுள்ளார்கள்.
இந்த பொலிசாரின் செயலை பொது மக்கள் பாராட்டியுள்ளார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக