வணக்கம்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

அதியுயர் நிர்வாக சேவைக்கு திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள்

இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் 14.09.2015 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் தனது ஆரம்பக் கல்வியை யா / வளலாய் அ.மி.த.க. பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை யா / இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1995 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இளங்கலை (புவியியல்) சித்தி பெற்றார்.

சித்திரை 7 2015, கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் வெளிவிவகார அமைச்சினால் (COLOMBO TELEGRAPH) வெளியிடப்பட்ட விபரங்களின் படி இலங்கை கடல்கடந்த சேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட 42 நபர்களிலில் அகரவரிசைப்படி 18 வது ஆளாக காணப்படும் கிரிதரன் குமாரசாமி என்பவர் வளலாய் அச்சுவேலி ஐச் சேர்ந்தவர் என்பதை தெரியப்படுத்துவதில் வளலாய் இணையம் பெருமைப்படுகின்றது.
திரு கிரிதரன் குமாரசாமி M.A. M.Ed., 2005 இலிருந்து 2007 வரை வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலும் 2007 இலிருந்து 2012 வரை வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலத்திலும் 2012 இலிருந்து இன்றுவரை யா / நெல்லியடி மத்தியகல்லுரியிலும் ஆசிரியராக பணியாற்றுகின்றார். “பௌதீகப் புவியியல்” “சூழற்புவியியல்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள கிரிதரன் ஆசிரியர் முதுகலைப் படிப்பை 

பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் M.Ed. பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதரச் சிரமங்கள் இடம்பெயர்வுகளுக்கு மத்தியிலும் தன்னாற்றலால் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேர்ந்துள்ளதோடு வளலாய் கிராமத்துக்கும் பெருமையும் புகழும் சேர்த்துள்ளார். அவர் SLOS – GR II, GR I தேர்வுகளிலும் சித்தி பெற்று வெளிநாட்டு தூதுவராக பதவி உயர்வு பெற வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் உறவுகள்.
இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
எம் நவக்கிரி .கொம்  நிலவரை .கொம்  நவற்கிரி கொம் ·இணையங்களின் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக