வணக்கம்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

ஊழியரின் முகத்தில் பணத்தை வீசி எறிந்த பெண் (காணொளி இணைப்பு)

சீனாவின் நகைக்கடை ஒன்றில் ஊழியர் மீது பெண் வாடிக்கையாளர் பணக்கட்டுகளை வீசி எறியும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹாண்டன் நகரிலுள்ள ஒரு நகைக்கடையில் இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் பெண் ஒருவர் நகைகளை பார்ப்பதற்கு கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் அவரிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது.

உடனடியாக ஆத்திரமடைந்த அவர் , நான் யார் தெரியுமா, எனது தந்தை யார் என்று தெரியுமா என்று ஆவேசமாக கத்துகிறார்.

பின்னர், நான் நினைத்தால் இந்த வீதியையே விலைக்கு வாங்க முடியும் என்று கூறிய அந்த பெண் தனது பையில் இருந்த பணக்கட்டுகளை ஊழியரின் முகத்தில் வீசுகிறார்.

எனினும் பெண் ஊழியர் அமைதியாகவே இருக்கிறார். உடனடியாக அருகில் இருந்த மற்றொரு வாடிக்கையாளர் அவரை சமாதானம் செய்து அழைத்து செல்கின்ற காட்சிகள் அந்த காணொளியில்  பதிவாகியுள்ளது.

எனினும் அப்பெண்ணை பற்றி எந்த விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை. இந்த காணொளி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக