நகைத் தொழிலாளி ஒருவர் தவறான முடிவு எடுத்து நகை வேலைக்குப் பயன்படுத்தும் பொட்டாசியம் என்ற திரவத்தை அருந்தி உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
நண்பனின் வியாபார நோக்கம் கருதி ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று வழங்கியிருந்தார் என்றும் அந்தக் கடன் பணத்தை நண்பன் திரும்பித் தராததால் கடன் தொல்லையால் அவர் உயிர் மாய்த்தார் என்றும் விசாரணையில்
தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
“வியாபார நோக்கத்தில் ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பணத்தை கடனாகப் பெற்று தனது நண்பனுக்கு நகைத் தொழிலாளி வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கடன் பணத்தை நண்பனிடம் கேட்டபோது, 10 இலட்சம் ரூபாவை வழங்கி மிகுதிப் பணத்துக்கு சகோதரனின் பெயரில் காசோலை வழங்கியுள்ளார். காசோலையில் பெயர் குறிப்பிடப்பட்ட சகோதரன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் குறித்த குடும்பத்தலைவர் கடந்த 31ஆம் திகதி தனதுவீட்டில் தவறான முடிவு எடுத்து நகை வேலைக்குப் பயன்படுத்தும் பொட்டாசியத்தைக் குடித்துத்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில்
தெரிவிக்கப்பட்டது.
அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.
மருத்துவுமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மற்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.