கடலுக்குள் விழுந்த ஐபோனை டொல்பின் பத்திரமாக மீட்டு தந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்தவர் தெரெஸா ஷீ. நடன கலைஞரான இவர் தனது நண்பருடன் அட்லாண்டிக் சமுத்திரத்தில் பயணம் மேற்கொண்டார்.
மேலும் கடலில் இருந்த டொலிபின் மீன்களுடன் விளையாடியபடி நீந்தியுள்ளார். அப்போது படகில் இருந்த அவரது ஐபோன் தவறி தண்ணீரினுள் மூழ்கியது.
உடனடியாக கெசிகியு(Cacique) என்ற டொல்பின் கடலினுள் சென்று தவறி விழுந்த ஐபோனை வாயில் கவ்வியபடி பத்திரமாக மீட்டுவந்து கொடுத்தது.
இது தெரேசாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அந்த காணொளியை பார்த்த பலரும் டொல்பினின் புத்திசாலிதனத்தை
பாராட்டியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக