வணக்கம்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வானிலையின் சீரற்றத்தல் பராக்கிரம சமுத்திரத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் 
அறிவித்துள்ளது.
அத்துடன், கவுடுள்ள வாவியின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், நிமிடத்திற்கு 1200 கனஅடி நீர் பராக்கிரம சமுத்திரத்தின் ஒரு வான் கதவின் ஊடாக வெளியேறுவதாகவும், கவுடுள்ள வாவியில் இருந்து நிமிடத்திற்கு 1680 கனஅடி நீர் வெளியேறுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, மகாவலி கங்கையின் ஊடாக அதிகமாக நீ்ர் பெருக்கெடுத்தோடுவதால் மட்டகளப்பு - பொலன்னறுவை பிரதான வீதியானது நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாவதி பகுதிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளதால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு தடை
 ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகளவான மழை பெய்யும் என எதிர்வு 
கூறப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக