மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைப்பாடுகள் பெண்களிடமிருந்தே மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் செயற்பாடு குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
கடந்த காலங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கடமையின் நிமித்தம் வீதிகளில் நிற்கும்போது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து செய்யும் இளம்
பெண்களை நிறுத்தி அவர்களிடமிருந்து பல்வேறு போக்குவரத்து சட்டங்களை கூறி, பல மணி நேரம் அவர்களை வீதிகளில் நிறுத்தி
கதைப்பது, அவர்களிடம் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவது, தகாத முறையிலான பல விடங்களை பேசுவது போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகள் மாவட்ட நீதிமன்றுக்கு
கிடைக்கப்பெற்றுள்ளது.
இந் நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தும் முகமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை அழைத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்துமாறும்ன் போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான நடத்தைகளுக்கு மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் மா.கணேசராஜா கட்டளை பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மாவட்டத்தின் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியதுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அதற்கான கட்டளைகளையும் நீதவான்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களிலிருந்து அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்துக் குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட
கலந்துரையாடல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அவர்களின் அழைப்பின் பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக