யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு உந்துருளியில் வருகின்ற அடியார்கள் அவசியம் தலைக்கவசம் அணிந்து வருமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் தலைக்கவசம் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தலைக்கவசமின்றி ஆலயத்துக்கு வருகை தரவேண்டாமென உந்துருளிகளில் வருவோருக்கு ஆலயத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த வருடம் தலைக்கவசமின்றி வந்த பெண் வீதி விபத்தில் சிக்கிச் சாவடைந்தார். இந்நிலையில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக பாதுகாப்பு நிலையங்களில் தலைக்கவச பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஆலயத்துக்கு வரும் வாகனங்களை வீதியோரம் விடாதவாறு அருகில் உள்ள வித்தியாலய மைதானத்தில் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அருகே உள்ள சாலையூடாக வாகனங்களைக் கொண்டு சென்று தரிப்பிடத்தில் விடுமாறும் அறிவித்துள்ளனர்.
ஆலயத்துக்கு வருவோர் தமது உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்க்குமாறும்
கேட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக