வணக்கம்

செவ்வாய், 12 மார்ச், 2019

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
ஆலயத்தின் சூழலானது முரசு மோட்டை ஊரியான் கோரக்கன் கட்டு பிரதேசங்களை சேர்ந்த மக்களால் சுத்தம்
 செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம் திகதி விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதி இரவு நிறைவு பெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக