வணக்கம்

வியாழன், 21 ஜனவரி, 2016

மற்றைய நாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு தடை?

நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு
 தீர்மானித்துள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்பில் வெளியாகிய ஊடக அறிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் வைத்திய சேவை கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன
 தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி கோரி தனியார் வைத்தியசாலைகளினூடாக முன்வைக்கப்பட்டிருந்த 29 விண்ணப்பங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளின் ஒழுக்காற்று குழுவை அழைத்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக