பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் புரட்சிகர செயற்கைக் கண் (பயோனிக் கண்) மூலம் 6 வருடங்களுக் குப் பின்னர் முதல் தடவையாக பார்வை ஆற்றலைப் பெற்றுள்ளார்.
கார்டிப் பிராந்தியத்தைச் சேர்ந்த றியான் லெவிஸ் (49 வயது) என்ற மேற்படி பெண் 5 வயது சிறுமியாக இருந்த போது தனது பார்வை ஆற்றலை இழக்க ஆரம்பித்தார்.அவர் தனது வலது கண்ணிலான பார்வை ஆற்றலை 16 வருடங்களுக்கு முன்னர் இழந்தார்.
இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன் அவரது பார்வை முழுமையாக பாதிக்கப்பட்டு சூரிய ஒளியின் பிரகாசத்தை மட்டுமே அவதானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்டிருந்த பரம்பரை ரீதியான பாதிப்பால் அவரது விழித்திரையிலிருந்த ஒளி உணர்கலங்கள் அழிவடைந்தமை காரணமாகவே அவர் பார்வை ஆற்றலை இழக்க நேர்ந்தது.
இதனையடுத்து ஒக்ஸ்போர்ட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் புரட்சிகர செயற் கைக் கண்ணை அவருக்கு வெற்றிகரமாக பொருத்தி அவர் மீண்டும் பார்வை ஆற்றலைப் பெற வழிவகை
செய்துள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு செயற் கைக் கண்ணானது 16 வருடங்களுக்கு முன்னர் பார்வை ஆற்றலை இழந்திருந்த அவரது வலது கண்ணில் பொருத் தப்பட்டது.
இந்த செயற்கைக் கண்ணைப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச் சையில் வயதாதலுடன் தொடர்புடைய தசை நார் சிதைவு காரணமாக வயோதிபர்களில் ஏற்படும் குருட்டுத் தன்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் விழித்திரையில் பொருத்தப்படும் சிப் உபகரணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேற்படி சிப் உபகரணத்தை ஜேர்மனிய நிறுவனமான ரெரினா இம்பிளான்ட் ஏஜி உருவாக்கியுள்ளது.
புரட்சிகரமான இந்த செயற்கைக் கண்ணின் ஊடாக ஒருவர் ஒரு பொரு ளைப் பார்க்கும் போது இந்த சிப் உபகரணம் ஒளியை மின்சார சமிக் ஞைகளாக மாற்றி பார்வை நரம்புகள் மூலம் மூளைக்குக் கடத்துகிறது. இதனால் அவருக்கு குறிப்பிட்ட பொருளைப் பார்ப்பது
சாத்தியமாகிறது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக