முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.
அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் „சியோபன் ஞானகுலேந்திரன்“ . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இவரோடு இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து சில நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். படத்தில் இருப்பவர் டியானா மற்றும் சியோபன்.
முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக