நோயின் தாக்கத்தை தாங்க முடியாத ஒருவர் நஞ்சு திரவம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த ஏட்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
தாவடி வடக்கு, கொக்குவில் மேற்கு என்னும் இடத்தை சோந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான
கணபதி தம்பித்துரை (வயது 75)
என்பவர் கடந்த 26 ஆம் திகதி நஞ்நசுத் திரவகம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படடிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் சிகிச்சை
பயனளிக்காத நிலையில்
மரணம் அடைந்துள்ளார். நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக