பிரான்ஸில் தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு பிரதமர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்து
உள்ளார்.
பாதுகாப்பு நிறைந்த பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 129 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலை அடுத்து தீவிரவாதிகள் வேட்டையில் பிரான்ஸ்
போலீஸ் படை
இறங்கிஉள்ளது. நேற்று போலீஸ் நடத்திய ரெய்டின் போது பெண் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு
உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் அவசரநிலையை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மானுவெல் வால்ஸ் பேசுகையில், தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்தார். “எதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.
ரசாயன அல்லது
உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களாலும் ஆபத்து உள்ளது. இதற்கிடையே விமான பயணம் செய்பவர்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் தகவல்களை பறிமாறிக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்து
உள்ளார்.
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க, நமக்குள் ஒருங்கிணைப்பு என்பது தேவையானது என்று மானுவேல் வால்ஸ் கூறிஉள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக