யாழ் கைதடி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்
குறிப்பிட்டனர்.கைதடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை முதல் குறித்த இளைஞர் காணாமற் போயிருந்த
நிலையில் இன்று
காலை அவரது சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக