கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்கு சொந்தமான UL131 விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த விமானம் 7 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தரித்து நின்றதாக தி ஹிந்து செய்தி
வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபக்க இயந்திர பகுதி மீது பறவை மோதியுள்ளதாகவும் எனினும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் நேற்று வியாழக்கிழமை காலை 9.40 அளவில் ஸ்ரீலங்கா நோக்கி பயணிக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் காரணமாக தாமதாகவே புறப்பட்டதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி நேற்று மதியம் சென்ற ஒரு தொகுதி பொறியியலாளர்கள் குழு குறித்த விமானத்தித் திருத்தப்பணிகளை மேற்கொண்டதை அடுத்து, குறித்த விமானம் நேற்று மாலை 5.20 அளவில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக