நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தன்னைக் காதலித்த இளைஞனை ஏமாற்றி வெளிநாடு செல்ல முற்பட்டதால் குறித்த இளைஞன் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட
சம்பவம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நீ என்னுடன் தொடர்ந்து கதை, எது வேண்டுமானாலும் என்னைச் செய்... ஆனால் கலியாணம் கட்டமாட்டேன். ஏனெனில் நான்
வெளிநாடு செல்லப் போகின்றேன்
என தன்னை உயிருக்கு உயிராகக் காதலித்த இளைஞனுக்கு சொல்லியுள்ளாள் நெல்லியடி யுவதி. துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இளைஞன் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து வந்துள்ளான். யுவதியின் தம்பியும் குறித்த இளைஞனும் நண்பர்கள் எனவும் தெரியவருகின்றது.
நண்பர்களான இவர்கள் இருவருமாக ஒன்றாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது பொலிசார் மறிக்காது நின்றதால் பொலிசாரிடம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கத. யுவதியும் யுவதியின் பெற்றோரும் குறித்த ஆட்டோக்கர இளைஞன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக இருப்பது தெரிந்தும் இளைஞனை தமது வீட்டுக்குள் அனுமதித்து அவனுடன் கூடிக்குழாவியுள்ளனர். அத்துடன் யுவதியும் அவனுடன்
பல இடங்களுக்கு
தனியே சென்றுவந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் யுவதி குறித்த இளைஞனுடன் நெருங்கிப் பழகுவது பெற்றோருக்குத் தெரிந்தும் அவர்கள் அதைப் பற்றி பொருட்படுத்தாது இருந்துள்ளனர். அத்துடன் குறித்த ஆட்டோக்காரனின் உழைப்பையும் இவர்கள் பெற்று வந்துள்ளதாக துன்னாலை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் யுவதியின் உறவினர்கள் கனடாவில் இருந்து வந்து யுவதியின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த யுவதிக்கும் ஆட்டோக்காரனுக்கும் இடையில் இருந்த தொடர்பை அறிந்து அவனது
சமூகத்தைப் பற்றியும்
அறிந்துவிட்டு அவளை இளைஞனிடம் இருந்த பிரிப்பதற்கு தந்திர நடவடிக்கையில் இறங்கினர். கனடாவுக்கு யுவதியை அழைத்துச் செல்வதாகவும் அங்குள்ள ஒரு இளைஞனுக்கு திருமணம் முடித்து வைப்பதாகவும் யுவதிக்குத் தெரிவித்த போது யுவதி தனது நிலையை மாற்றிவிட்டாள். இதன் பின்னர் குறித்த ஆட்டோக்கார
இளைஞனுக்கு
தான் வெளிநாடு போவதாகத் தெரிவித்து இனிமேல் தன்னுடன் தொடர்பு வைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளாள். இதனைக் கேட்ட ஆட்டோக்கார இளைஞன் குறித்த யுவதியின் வீ்ட்டின் முன் இரவு வேளையில் சென்று தான் நஞ்சு குடிக்கப் போவதாக யுவதியிடம் தெரிவித்த போது யுவதியும் ‘நீ குடித்தால் எனக்கு என்ன?‘ என கேட்டு அவளை தற்கொலை முயற்சிக்கு துாண்டியதாகத் தெரியவருகின்றது,
இதனையடுத்து குறித்த இளைஞனும் நஞ்சருந்தியதாகத் தெரியவருகின்றது. இளைஞன் நஞ்சருந்தியதையடுத்து அவனது சகோதரருக்கு குறித்த யுவதியின் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லிவிட்டு இருந்துவிட்டார்கள். இதன் பின்னர் வரணியில் இருந்து
இளைஞனின்
சகோதரன் வந்து இளைஞனை அந்த இடத்தில் இருந்து துாக்கிச் செல்லும்வரையும் யாரும் அவனைக் காப்பாற்ற முற்படவில்லை எனத் தெரியவருகின்றது. தற்போது குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இளைஞன் நஞ்சருந்திய தகவல்கள் பரவியதும் இளைஞனின் நண்பர்களும்
துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. தன்னைக் காதலித்தவன் ஏமாற்றிவிட்டான் என கூறி பொலிஸ் நிலையம் செல்லும் யுவதிகளுக்கு ஆதரவாக நடக்கும் பொலிசாரும் நீதித்துறையினரும் இளைஞர்களுடன் ஒன்றாகத் திரிந்து அவர்களுடன் பாலியலுறவு கொண்டு அவர்களது உழைப்புக்களைச் சுரண்டி எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு அவனை அம்போ என்று வி்ட்டுவிட்டு இன்னொவனைத் திருமணம் செய்யும் யுவதிகளை தண்டிக்க மாட்டார்களா?? என கேட்கின்றார்கள்.
குறித்த இளைஞன் பொலிசாரிடம் சென்று முறையிட்டால் அவனுக்கு நீதிகிடைக்குமா? வழக்குத் தாக்கல் செய்வார்களா? குறித்த யுவதியை தண்டனைக்கு உள்ளாக்குவார்களா?? என்பது கேள்விக்குறியாக
உள்ளதாக
குறித்த இளைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணம் உட்பட பபல இடங்களில் நடக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் யுவதிகள், மாணவிகளின் பிறழ்வுகளுக்கும் அந்தப் பெண்பிள்ளைகளின் பெற்றோரும் காரணமாக உள்ளார்கள் என்பது தெரியவருகின்றது. தனது
பிள்ளை என்ன
செய்கின்றாள், யாருடன் நட்புக் கொண்டுள்ளாள் என்பது பற்றித் தெரிந்திருந்தும் அல்லது அது பற்றி அக்கறையில்லாது இருந்துவிட்டு பின்னர் பிரச்சனைகள் வரும் போது குய்யோ முறையோ என கத்திக் கூப்பாடு போட்டு தங்களை நியாயப்படுத்தப் பார்க்கும் பெற்றோரையும் சிறைக்குள் அடைக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக