வடக்கு தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மாத்தறை – பெலியத்த தொடர்ந்து பாதையின் நிர்மாணப் பணிகளில் தொடர்ந்து திணைக்களத்தினால் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பிழைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையில் வடமாகாண தொடர்ந்து பாதை நிர்மாணப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த வேலைத்திடம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் மொத்த நீளம் 146 கிலோமீற்றர்களாகும்.
அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்படும் தொடர்ந்து பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான கடந்த மே மாதம் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் அறிக்கையின்படி, வடக்கு தொடர்ந்து பாதையில் பொருத்தப்பட்டுள்ள சில்பர் கட்டைகள் தற்போதையே வெடித்தும், விரிசல் அடைந்தும் காணப்படுவதாக
தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக