வணக்கம்

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொற்று நோய்களின் தாக்கம் சாவகச்சேரியில் அதிகரிப்பு!!!


யாழ்.சாவகச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சல், விஷக் கடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்று நோய்கள் பரவலை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடமாகாணத்தில் கனமழை பெய்த நிலையில் மழையினால் யாழ்.மாவட்டத்தில் அதிகளவான பாதிப்பை 
சந்தித்திருந்தது.
இந்நிலையில் மழை வெள்ளம் தணிந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக சாவகச்சேரி சுகாதார பகுதி அறிவித்துள்ளதுடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்றுநோய்களை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுநோய்கள் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளதுடன், விஷகடி தொடர்பிலும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மக்கள்
 கேட்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக