யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த தனியார் பஸ் வண்டியிலிருந்து 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் நிறுத்தப்பட்டு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக