வணக்கம்

புதன், 25 நவம்பர், 2015

நபரொருவரால் 18 வயதான பாடசாலை மாணவிகடத்தல்!!

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை 
கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் போது குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியில் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார்
 கண்டுபிடித்ததுடன் , 
 அதன் சாரதியிடம் மேற்கொண்ட விசாரனையின் போது முச்சக்கரவண்டியில் இருந்த அந்த மாணவியை வெஸ்ஸகிரிய பிரதேசத்தில் வைத்து இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியை சேர்ந்தவராவார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக