தேசிய ரீதியில் மூன்றாவது கண்ணால் உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் நடத்தப்பட்ட புகைப்படப் போட்டியில் 21 வயதுப் பிரிவில் மானிப்பாய்
இந்துக் கல்லூரி மாணவன் சிவநேஸ்வரன் நிஜந்தன் வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சானது பாடசாலையில் இயங்குகின்ற ஊடகக்கழக உறுப்பினர் பங்குபற்றுகின்ற வகையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டியிலேயே மேற்படி விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எஸ்.ரி. அருள்குமரனை பொறுப்பாசிரியராக கொண்டு இயங்கும் காண்பிய ஊடகக் கழகத்தின் தலைவராக மேற்படி மாணவன் செயற்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக