வணக்கம்

திங்கள், 30 நவம்பர், 2015

யாழ் பொலிஸாரால் கஞ்சாவுடன் இருவர் கைது!!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த தனியார் பஸ் வண்டியிலிருந்து 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் நிறுத்தப்பட்டு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் வடக்கு ரயில் பாதையில்

வடக்கு தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மாத்தறை – பெலியத்த தொடர்ந்து பாதையின் நிர்மாணப் பணிகளில் தொடர்ந்து திணைக்களத்தினால் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பிழைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தின்...

ஒல்லாந்தர் கால 200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம்  (28,11,15) அதிகாலை 2 மணியளவில் உடைந்து  வீழ்ந்துள்ளது. இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு  செய்யப்பட்டுள்ளது. 60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. இதேவேளை,...

சனி, 28 நவம்பர், 2015

ஸ்ரீலங்கா விமானம் மீது பறவை மோதியது!!!

கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்கு சொந்தமான UL131 விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த விமானம் 7 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தரித்து நின்றதாக தி ஹிந்து செய்தி  வெளியிட்டுள்ளது. குறித்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபக்க இயந்திர பகுதி மீது பறவை மோதியுள்ளதாகவும் எனினும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

வியாழன், 26 நவம்பர், 2015

மைத்திரி சிறிசேன பியர் மீது கடுப்பில்.

வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவை  பணித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5 % க்கும் குறைந்த அல்கஹோல் மட்டம் கொண்ட மதுபானங்களின் இறக்குமதி வரியை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அல்கஹோல் மட்டம் குறைந்த ஒரு லீட்டர் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி 190 ரூபாவிலிருந்து 160 ரூபாவாக...

புதன், 25 நவம்பர், 2015

நபரொருவரால் 18 வயதான பாடசாலை மாணவிகடத்தல்!!

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை  கடத்திச்செல்லப்பட்டுள்ளார். அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் போது குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியில் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்...

திங்கள், 23 நவம்பர், 2015

கஞ்சாவுடன் பஸ் நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு நகரில் இன்று காலை கஞ்சா கலந்து போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோதே கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். ஓட்டமாவடியை சேர்ந்த குறித்த நபர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கலநத போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும்...

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொற்று நோய்களின் தாக்கம் சாவகச்சேரியில் அதிகரிப்பு!!!

யாழ்.சாவகச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சல், விஷக் கடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்று நோய்கள் பரவலை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வடமாகாணத்தில் கனமழை பெய்த நிலையில் மழையினால் யாழ்.மாவட்டத்தில் அதிகளவான பாதிப்பை  சந்தித்திருந்தது. இந்நிலையில் மழை வெள்ளம் தணிந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்த...

வியாழன், 19 நவம்பர், 2015

ரசாயன ஆயுதங்களை கொண்டு பிரான்ஸில் தாக்குதல் நடத்தப்படலாம்?

பிரான்ஸில் தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு பிரதமர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்து  உள்ளார். பாதுகாப்பு நிறைந்த பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 129 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலை அடுத்து தீவிரவாதிகள் வேட்டையில் பிரான்ஸ்  போலீஸ் படை  இறங்கிஉள்ளது. நேற்று...

புதன், 18 நவம்பர், 2015

கட்டுமுறிவு ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு உதவி

வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் உதவிகளை செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார். அண்மையில் தொடர்ந்து மழைய பெய்ததால் கட்டுமுறிவுகுளம் நிரம்பி நீர் வடிந்ததால் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் நடைபாதை தடைப்பட்டது. அத்தோடு கட்டுமுறிவுக்கு கதிரவெளியில் இருந்து...

செவ்வாய், 17 நவம்பர், 2015

முதியவர்ஒருவர் ஆபாச இருவெட்டுக்களுடன் கைது

ஆபாச காட்சிகள் அடங்கிய இருவெட்டுக்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று கைது  செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 16 நவம்பர், 2015

கொலைக்களமாக மாறும் யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது. மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை. படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை. அங்கு படுப்பதற்கு  இடமுமில்லை. அங்கே பணி புரிகின்ற தாதியர்கள்...

வெள்ளி, 13 நவம்பர், 2015

வட-கிழக்கில் இன்று ஹர்த்தால்முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!

வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் போராட்டத்தினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும்  பயங்கரவாத  தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய யாழ்....

புதன், 11 நவம்பர், 2015

புகைப்பட போட்டியில் தேசிய ரீதியில் மானிப்பாய் இந்து மாணவன் வெற்றி

தேசிய ரீதியில் மூன்றாவது கண்ணால் உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் நடத்தப்பட்ட புகைப்படப் போட்டியில் 21 வயதுப் பிரிவில் மானிப்பாய்  இந்துக் கல்லூரி மாணவன் சிவநேஸ்வரன் நிஜந்தன் வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.  கல்வி அமைச்சானது பாடசாலையில் இயங்குகின்ற ஊடகக்கழக உறுப்பினர் பங்குபற்றுகின்ற வகையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட...

ஞாயிறு, 8 நவம்பர், 2015

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)

யாழ் கைதடி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்  குறிப்பிட்டனர்.கைதடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை முதல் குறித்த இளைஞர் காணாமற் போயிருந்த  நிலையில் இன்று  காலை அவரது சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக...

சனி, 7 நவம்பர், 2015

காட்டுக்குள் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு ஐயன்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஐயன்கேணி மயானத்திற்கு பிற்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதிக்குள் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பொதுமக்கள் கண்டுள்ளனர். ஐன்கேணியைச் சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக அடயாளம் காணப்பட்டுள்ளார். இவர் வாகரை பாடசாலையில் சித்திரப்பாட ஆசிரியர்...

வியாழன், 5 நவம்பர், 2015

பொம்பிளைப்பிள்ளையின் திருவிளையாடலால்! காதலித்தவன் நஞ்சு குடித்தான்!!

நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தன்னைக் காதலித்த இளைஞனை ஏமாற்றி வெளிநாடு செல்ல முற்பட்டதால் குறித்த இளைஞன் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட  சம்பவம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நீ என்னுடன் தொடர்ந்து கதை, எது வேண்டுமானாலும் என்னைச் செய்... ஆனால் கலியாணம் கட்டமாட்டேன். ஏனெனில் நான்  வெளிநாடு செல்லப் போகின்றேன்  என தன்னை உயிருக்கு உயிராகக் காதலித்த இளைஞனுக்கு சொல்லியுள்ளாள்...

செவ்வாய், 3 நவம்பர், 2015

உணவிற்கு பின்னர் சுடுநீர் அருந்த வேண்டியதன் அவசியம்!

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்… மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால்...

திங்கள், 2 நவம்பர், 2015

காணோளியில் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவானதால் பரபரப்பு !

ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எத்தனையோ காணோளிகள் இணையத்தில் வெளியாகியுள்ள  நிலையில்,  தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காணோளி ஒன்றில் ஏலியன்களின் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவாகியிருப்பது ஏலியன் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ போஸ்டன் நகரில் கடந்த 24-ம் திகதி இரவு 07.00 மணியளவில் இந்த காணோளி எடுக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...