வணக்கம்

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்வதேச தரத்திற்கு யாழிலுள்ள உணவகங்களை மாற்ற முயற்சி ?

யாழில் உள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே எமது  அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் என வடமாகாண சுகாதார  உத்தியோகத்தர் கேசவன் தெரிவித்தார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் 
தெரிவிக்கையில் 
ஜேர்மனின் பி.ரி.பி அமைப்பு  மற்றும்  இலங்கை  அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  உணவு மேம்பாட்டு தொழிற்பாட்டு திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உணவு உற்பத்தி  உணவைப் பேணுதல்  உணவு விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் ஆரோக்கியமான  இரசாயன கலப்பற்ற கிருமி தொற்று அற்ற   உணவை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையே இத் திட்டதின் மூலம் 
பயிற்றுவிக்கப்படவுள்ளது.
இதன் முதற் கட்டமாக  உணவு தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகளில் தற்போதய நிலை மையை  ஆராய்ந்து  அறிக்கை  ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 
இவ்  அறிக்கையில் உணவு தொழிற்சாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி  ஆராய்ந்திருக்கின்றோம். இவ் அறிக்கையின் நோக்கம் உணவகங்கள் மீது குற்றம் சாட்டுவதல்ல. உணவகங்களை தற்போது  இருக்கின்ற நிலையைவிட மேலும் தரமுயர்த்துவதே
 இதன்  நோக்கம். 
இங்குள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே  எமது அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக