வணக்கம்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சத்திர சிகிச்சை உபகரணங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சத்திர சிகிச்சை உபகரணங்கள் நேற்று(12) மாலை 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோட்போர் கூடத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி தனது 20 வருட சேவை நிறைவினை கொண்டாடும் இந்த ஆண்டில் “கூட்டாண்மை சமூக பொறுப்பு” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 15 அரச வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை பிரிவுகளுக்காக 24.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி யின் மன்னார் கிளை முகாமையாளர் எவ்.ஆர்.மனோகாந்த் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரெலா ரதனி யூட் முன்னிலையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சசிகரனிடம் வழங்கி வைத்தார்.
இதன் போது வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக