வணக்கம்

திங்கள், 30 நவம்பர், 2015

ஒல்லாந்தர் கால 200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் 
(28,11,15) அதிகாலை 2 மணியளவில் உடைந்து 
வீழ்ந்துள்ளது.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு
 செய்யப்பட்டுள்ளது.
60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,  கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம்
 ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக  தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‚இந்த கோபுரம்;  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் 
வீதி புனரமைப்பு 
வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது‘ என 
அவர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக