வணக்கம்

வெள்ளி, 10 ஜூலை, 2015

யேர்மனியர்கள் அகதிகளை விரட்டு கின்றனர் ???

ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Freital என்ற நகரில் நேற்று கூடிய அகதிகளுக்கு எதிரான அமைப்பினர், ஜேர்மனி குடிமக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர்களுக்கு தஞ்சம் அளிக்கும் அரசின் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் தொடர்பாக பேசிய Saxony மாகாண உள்துறை அமைச்சரான Markus Ulbig, அகதிகளுக்கு எதிரான அமைப்பினரின் இந்த போராட்டம் தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Freital நகரில் உள்ள ஒரு மையத்தல் கூடிய போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் Markus Ulbig ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரது வார்த்தைகளுக்கு செவி சாய்க்காத போராட்டக்காரர்கள் ஜேர்மனி மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு பெண்மணி 
கூறுகையில், தாங்கள் அமைதியாக வசிக்கும் பகுதியில் வெளிநாட்டினருக்கு தஞ்சம் அளிப்பதால் தங்களுடைய நிம்மதி பறிப்போய் உள்ளதாக புகார் கூறினார்.
தஞ்சம் கோருபவர்கள் தங்கியுள்ள வீடுகளிலிருந்து தேவையற்ற பொருட்களை காணும் இடங்களிலெல்லாம் வீசுவது நகரத்தையே அசுத்தமாக்கியுள்ளது.
இரவு நேரங்களில் அவர்கள் எழுப்பும் சத்தத்தால் தங்களால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் தஞ்சம் கோருபவர்களுக்கு நிதியை வீணாக்குவதற்கு பதிலாக நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் அந்த நிதியை பயன்படுத்தலாம் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக நடந்த இந்த போராட்டம் நேற்று உச்ச நிலைக்கு சென்றதால், ஆளும்கட்சி அரசியல்வாதிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக