வணக்கம்

வியாழன், 30 ஜூலை, 2015

தீவிர வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா- ரொறொன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி புதன்கிழமை காணப்படும் நகரத்தின் வெப்ப எச்சரிக்கை ஒரு தீவிர வெப்ப எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். புதன்கிழமை வாரத்தின் 
அதிஉயர் வெப்ப 
நாளாக இருக்கும் எனவும் ஒன்ராறியோவின் தென்பாகத்தில் வெப்பநிலை 34C ஆக காணப்படும். பொது மக்களிற்காக குளிர்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளங்கள் சில இரவு 11.45மணிவரைக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதிவெப்பநிலை காரணமாக புழு ரயில் சேவைகளில் தாமதங்கள் 
ஏற்பட்டுள்ளன. வெப்பம் தொடர்பான அறிகுறிகளை- தலைசுற்றல் அல்லது மயக்கம், குமட்டல், தலைவலி ,விரைவான சுவாசம் மற்றும் தீவிர தாகம்- கவனிக்கும் வண்ணம் பொதுமக்கள் கேட்டுகொள்ளப் படுகின்றனர்.
 மிகவும் 
பாதிக்கப்படக்கூடிய வயதான குடும்ப அங்கத்தவர்கள், நீண்டகால நோய்வாய் பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாதலால் 
அவர்களை கவனிக்கும் வண்ணம் மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். வாகனங்களிற்குள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு செல்லவேண்டாம் என சாரதிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக