கனடா-ரொறொன்ரோ,ஸ்காபுரோ ஷாப்பிங் பிளாசா ஒன்றிற்கு அருகாமையில் வியாழக்கிழமை அதிகாலை 12.45மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தேக நபர்களை பொலிசார் தேடுகின்றனர். கென்னடி மற்றும் எல்ஸ்மியர் அருகில் அமைந்துள்ள பிளாசாவிற்கு
அருகாமையில் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆறு மற்றும் ஒன்பது குண்டு தடங்களையும் யன்னல் ஒன்றில் புல்லட் ஓட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக