கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பின்னர், இறந்து கிடந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிசாரால் கூறப்பட்டது.
ஆனால், அதேபகுதியில் வசித்த Andrea Taggart என்ற பெண்மணி, நபர் ஒருவர் உயிருக்கு பயந்து அலறி துடித்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறினார்.
பிற்பகல் வேளையில், அந்த பகுதியில் மர்ம நபர் ஒருவன் பொது மக்களுக்கு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்பட்டது. பொலிசார் அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபடும்போது அந்த நபர் அவர்களிடமிருந்து தப்பி அந்த
பகுதியை விட்டு வெளியேறியுள்ளான்.இந்த வேளையில் தான் தற்போது கொல்லப்பட்டுள்ள நபர் பொலிசாரிடம் தவறதுலாக சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.
நபரை சுற்றி வளைத்த 3 பொலிசாரும் பல முறை சுட்டதை தன்னால் கேட்க முடிந்தது என விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர் .,,,நிகழ்ந்துள்ளது.----
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக