வணக்கம்

சனி, 18 ஜூலை, 2015

வனத்துறையினரால் நன்னீர் ஆமைகள் மிட்பு!

வடக்கு பிலிப்பைன்ஸில் மட்டுமே காணப்படுபவை பலாவன் வன ஆமைகள். நன்னீரில் மட்டுமே வாழும் இந்த ஆமைகள் அருகிவரும் இனப் பட்டியலில் உள்ளன. ஹாங்காங், சீனா போன்ற நாடுகளுக்கு வளர்ப்புப் பிராணிகளாகவும்,
 உணவுக்காகவும் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் பலாவன் தீவில்
 தனியாருக்குச் சொந்தமான குளம் ஒன்றில் 4,000-க்கும் அதிகமான நன்னீர் ஆமைகள் கவனிப்பாரற்று, குற்றுயிராகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடி நடவடிக்கையில் இறங்கிய பிலிப்பைன்ஸ் சரணாலய வனத்துறையினர் அத்தனை ஆமைகளையும் பத்திரமாக
 மீட்டு அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன இந்த ஆமைகள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக