வணக்கம்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

600 மில்லியன் ரூபா வரை நட்டம் கடந்த வாரம் மின் தடையால் -

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக சுமார் 600 மில்லியன் ரூபாய் வரையில் நட்டம்  ஏற்பட்டுள்ளதாக  மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார சபையினால் மின்சார தடை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இந்த மின்சாரத்தடை ஏற்பட்டது.நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமையன்று ஏற்பட்ட மின் தடை சுமார் 5 மணித்தியாலங்களுக்கு...

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்புமரண தண்டனை:?

மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) அவர்களை கோடரியால்...

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

திடீரென யாழில் அதிகரித்த வெப்பநிலை: மக்கள் சிரமம்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியல்  அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின்  பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம,  புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில்...

திங்கள், 22 பிப்ரவரி, 2016

குடிபோதையினால் பறிபோன உயிர்?

 கினிகத்ஹேன  பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில்  20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்  கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர்  கண்டி - ஹட்டன் இடையிலான பயணிகள் பேரூந்தின் ஓட்டுனராக பணி  புரிந்துள்ளார். நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் 20 அடி பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதார். அவரின்  உடலை...

வியாழன், 18 பிப்ரவரி, 2016

விபத்தில் விடுமுறைக்காக வந்திருந்திருந்த 27 வயது இளைஞன் பலி!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை பழைய பிரதான வீதியில் 5ம் கட்டை ஆரையம்பதி -மண்முனை சந்தியில் நேற்று 15 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இலங்கை  வந்திருந்திருந்த  மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பூவரசன்குடா வீதியைச் சேர்ந்த புண்ணியமூரத்தி தயாபரன் 27வயது இளைஞன் ஸ்தலத்தில் தலை இரண்டாக சிதறி உயிரழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார்...

மிண்டும் வடக்கில் வீரர்களின் போர் ஆரம்பமாகிறது!

வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பெரும் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 9.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 16 ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குகின்றமை  குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை காலமும் நடைபெற்று முடிந்த 15 ந்து போட்டிகளில் இரு...

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஐந்து இலட்சம் யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலையில்!

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக்காக ஐந்து இலட்சம் யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பாரியளவில் வாகனங்கள் சிவனொளி அடவிப் பகுதிக்கு வந்திருப்பதோடு, நல்லதண்ணியிலிருந்து மவுஸ்ஸாகெல வரையான 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலை உச்சிக்கு செல்லும் போது அதிகபடியான யாத்திரிகர்களின்...

சனி, 13 பிப்ரவரி, 2016

பேருந்துக்களின் சாரதிகள் போட்டி போட்டோடுவதால் உயிரைக் கையில் பிடிக்கும் பயணிகள்

போட்டி போட்டோடும் பேருந்துக்களும் உயிரைக் கையில் பிடிக்கும் மக்களும். மனிதன் போக்குவரத்தினை ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை தனது அறிவிற்கும், தொழிநுட்பத்திற்கும் ஏற்ப வளர்த்து வந்துள்ள படிமுறைகளையும், வளர்ச்சியினையும் கற்றும் அறிந்தும் இருக்கின்றோம். அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையில் இன்று போக்குவரத்தானது துரித வளர்ச்சி அடைந்து காணப்படுவதோடு, நினைத்த மாத்திரத்தில் குறித்த இடத்தினை குறிப்பிட்ட மணி நேரத்தில் அச்சொட்டாக அடையவும் முடிகின்றது. இது...

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அதிகமாக சிறுநீரக நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சுத்தமான நீர் விநியோகம்?

சிறுநீரக நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீரை விநியோகிப்பது தொடர்பான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஐந்து மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 07 பில்லியன் ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதன் முதல் கட்டம் எதிர்வரும்...

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அரசாங்கம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தவறியுள்ளது!!!

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹீசைன் இதனை தெரிவித்தார். மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களானவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது எனவும் தெரிவித்தார். நாட்டில்...

வியாழன், 4 பிப்ரவரி, 2016

போதையில் வாகனம் ஓட்டிய சாரதிக்கு சிறை தண்டனை???

யாழ் மல்லாகம் நீதிபதி மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார். மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை...