வணக்கம்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஆணின் சடலம் கல்முனை பேரூந்து தரிப்பிடத்தில் மீட்பு!!!

அம்பாறை கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல்  மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த நபர் கல்லாறு காளி கோயில் வீதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க தம்பிராசா வரதரதசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனியார் பேரூந்துகளில் நடத்துனராகவும். கடைகளிலும் தொழில் புரிந்து வந்ததாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள், அதிகளவில் மது அருந்துபவர் எனவும் கூறினர். கல்முனை பஸ் நிலையக் கட்டடத் தொகுதியின்...

புதன், 27 ஜனவரி, 2016

தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளை கீரிமலையில் அகற்ற நடவடிக்கை

யாழ் கீரிமலையில் அமைந்துள்ள தென்னிலங்கை வியாபாரிகளின் பெட்டிக்கடைகளை அகற்றும்படி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள். 12 ஆண்டுகளுக்கு மேலாக கீரிமலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் பெட்டிக் கடைகளை ஐந்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடத்தி வருகின்றார்கள். இது வரைக்கும் குறிப்பிட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று வலிவடக்கு பிரதேச சபையோ,...

திங்கள், 25 ஜனவரி, 2016

நவற்கிரி பகுதியில் உண்டானது புவியதிர்வல்ல தரையிறக்கம்?

யாழ்.அச்சுவேலி-நவற்கிரி புத்தூர் மேற்கு. பரத்தப்புலம் என்னும்  (வடக்குவெளி) பகுதியில் திரு.கந்தையா .சுப்பிராமணியம் என்பவருடைய வீ ட்டுசசுவர்களும். தோட்டவாய்கால்களும் நிலமும் பாதிப்புக்கு உள்ளானது-நிலத்தில் உண்டான திடீர் பிளவுகள் புவியதிர்வல்ல எனவும், அவை நிலத்தின் கீழ்  உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும்  உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைகழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம்...

சனி, 23 ஜனவரி, 2016

பொலிஸாருக்கு சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பிரித்தானியா உதவி [

யாழ் பொலிஸாருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த பிரித்தானியா, யாழ்ப்பாண பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த யாழ்ப்பாண பொலிஸாருக்கு சாத்தியங்கள் ஏற்படும் என  தெரிவிக்கப்படுகிறது. ...

வியாழன், 21 ஜனவரி, 2016

மற்றைய நாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு தடை?

நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு  தீர்மானித்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்பில் வெளியாகிய ஊடக அறிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் வைத்திய சேவை கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன  தெரிவித்துள்ளார். அதற்கமைய, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு...

திங்கள், 18 ஜனவரி, 2016

இலங்கைப் படையணி அமைதி காக்கும் கடமைகளுக்கு செல்லவுள்ள?

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்காக செல்லவுள்ள, இலங்கையின் 10ஆவது அமைதிகாக்கும் படையணியினர் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலிருந்து புறப்பட்டுச்  செல்லவுள்ளனர். இந்தத் படையணியில் பத்து அதிகாரிகளும் நூற்று நாற்பது பேரும் அடங்குகின்றனர். குறித்த படையணிக்கு லெப்டினன்ட் கேணல் யூ.கே.டி.பி.பி.உடுகம தலைமை தாங்குகிறார். குறித்த பணிக்காக புறப்படுமுன் நடைபெறும் படையணி அணிவகுப்பு நேற்று அநுராதபுரம் – சாலியபுர, கஜபா ரெஜிமேன்ட்...

வியாழன், 14 ஜனவரி, 2016

சிறுவன் ஒருவன் உட்படநான்கு பேர் குளவிக்கொட்டியதால் பாதிப்பு!

திருகோணமலை, தெவனிபியவரப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான  சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தெவனிபியவரப் பகுதியைச் சேர்ந்தவர்களான  சாமர மதுசங்க (வயது 03), வை.சுனீதா குமாரி (வயது 25) எம்.எம்.சஞ்சீவ (வயது 32), டபிள்யூ.திலகாவத்தி (வயது 27) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.  விஜய பாலர் பாடசாலையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளவிக் கூடு...

திங்கள், 11 ஜனவரி, 2016

பார்வை இழந்து ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் பார்வை ஆற்றல்!!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் புரட்­சி­கர செயற்கைக் கண் (பயோனிக் கண்) மூலம் 6 வரு­டங்­க­ளுக் குப் பின்னர் முதல் தட­வை­யாக பார்வை ஆற்­றலைப் பெற்­றுள்ளார். கார்டிப் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த றியான் லெவிஸ் (49 வயது) என்ற மேற்­படி பெண் 5 வயது சிறு­மி­யாக இருந்த போது தனது பார்வை ஆற்­றலை இழக்க ஆரம்­பித்தார்.அவர் தனது வலது கண்­ணி­லான பார்வை ஆற்­றலை 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இழந்தார். இந்­நி­லையில் 6 வரு­டங்­க­ளுக்கு முன் அவ­ரது பார்வை...

வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஈழத்துப் பெண் முதலாவதாக விண்வெளிக்கு பறக்கிறார்!!!

முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி...

செவ்வாய், 5 ஜனவரி, 2016

முதியவர் நோயின் தாக்கம் தாங்காமல் நஞ்சருந்திய மரணம்!

நோயின் தாக்கத்தை தாங்க முடியாத ஒருவர் நஞ்சு திரவம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த ஏட்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.  தாவடி வடக்கு, கொக்குவில் மேற்கு என்னும் இடத்தை சோந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான  கணபதி தம்பித்துரை (வயது 75)  என்பவர் கடந்த 26 ஆம் திகதி நஞ்நசுத் திரவகம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படடிருந்தார். நேற்று...

சனி, 2 ஜனவரி, 2016

மரணமடைந்தவர் வீட்டில் வாகனம் மோதி இருவர் பலி?

வாகன விபத்தில் மரணமடைந்த மொரட்டுவை கோரளவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் மரண வீட்டுக்கு அருகில் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வீதியில் சென்ற வான்  மோதியதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த வீதியில் பயணித்த வானே வீதியை விட்டு விலகி இவர்கள் மீது மோதியுள்ளது. அதனையடுத்து...