வணக்கம்

வியாழன், 29 டிசம்பர், 2016

சிகை ஒப்பனை நிலைய உரிமையாளர்களுக்கு ஓர் செய்த?

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையே இவ்வாறு நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையால் மாணவர்களின் நலன்கருதி விடுமுறை நாளான ஜனவரி மாதம் 01 ஆம் திகதி...

புதன், 28 டிசம்பர், 2016

.-தனியார் -· இ.போ.ச பேருந்து சாரதிகள் மோதல்!

வவுனியா இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (27) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா - செட்டிகுளம் செல்லவிருந்த அரச பேருந்தில் பயணிகளை ஏறிக்கொண்டிரு க்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேருந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது இதில் கைகலப்பில்...

செவ்வாய், 27 டிசம்பர், 2016

முற்றாக பொலித்தீன் பாவனை 2017இல் இருந்து தடை?

2017 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தின் ,பிளாஸ்ரிக், ரெஜிபோம், பாவனைகளை  தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே. எச் முதுகுடா ஆராச்சி தெரவித்து ள்ளார். இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும். புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர்  உற்பத்தியாளர்களும்.பொதுமக்களும்...

திங்கள், 19 டிசம்பர், 2016

பொலிசாரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வயோதிபத் தாய் மீட்பு!

      வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த 70வயதுடைய பெண் வயோதிபர் கணவன் கடந்த 7நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு...

சனி, 17 டிசம்பர், 2016

இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கபபடடது !

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம்...

புதன், 23 நவம்பர், 2016

ஒரு நிமிடம் இந்த காணொளியை பாருங்க சிரித்து சிரித்து மகிழ்வீங்க!.

உங்கள்  மனதில்  ஆயிரம்  கவலையா?ஒரு நிமிடம் இந்த  காணொளியை பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க!. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

புதன், 16 நவம்பர், 2016

புதிய வாகன சட்டத்தின் மூலம் அனைத்து வாகன சாரதிகளுக்கும் ஆப்பு

புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500 இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000 வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் (Vehicle will be taken to court..) ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும் வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should...

வியாழன், 10 நவம்பர், 2016

அடித்தது யாழ் இளைஞர், யுவதிகளுக்கு யோகம்!

யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ்...

சனி, 5 நவம்பர், 2016

இளைஞர்கள்அவுஸ்திரேலியாவில் குடியேற அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள இளைஞர்கள் அவுஸ்திரேலியா சென்று பல்கலைக்கழக பட்டம் முடித்துவிட்டு அந்த நாட்டிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார  தெரிவித்துள்ளார். நான்கு வருட பட்டப்படிப்பை நான்கு நிலைகளில் நிறைவு செய்ய முடியும் என்றும், மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார் பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பணி புரிவதற்கான...

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

புதிய யாழ் பொலிஸ்நிலையம் ராசியில்லையாம் பொலிஸார் கவலை

யாழ்ப்பாணத்தில்  புதிதாக  கட்டப்பட்டு  திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை  தெரிவித்துள்ளனர். இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது. இக் கட்டடத்தை கட்டிய பொறியியலாளர்  பொலிஸ்நிலையம் திறந்து   மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார். அத்துடன்   கட்டட...

வெள்ளி, 28 அக்டோபர், 2016

கட்டுரை பேச்சு போட்டிகளில் சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள் முதலிடம்

நம் தாய்மண்ணான வீரம் செறிந்த மண் வன்னி மண் கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவிகள் !! அகில இலங்கையில் பேச்சு கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள். குறித்த இத்தகு ஆற்றல்களை மண்ணில் வளர்த்தெடுப்பதற்கும் காரணமாய் இருந்த அவரது பெற்றோர் ஆசிரியர்கள் வரலாற்றில் முக்கியமாணவர்கள். சாமந்தி அபிராமி இவர்களால் அந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்தமை வரலாற்றின் முக்கிய பதிவுகளாகும்…இவர்களுக்கு...

வியாழன், 20 அக்டோபர், 2016

தட்டாதெருச் சந்தியில் வாகன விபத்து : இருவர் காயம்

யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து தாமதமானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்டவேளையில் கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே இந்த விபத்து...

யாழ் மாவட்ட பாடசாலை வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவிப்பு

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டிகள் கடந்த வாரம் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலை பதக்கம் வென்றது அந்தவகையில்,  21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெண்கலப்பதக்கம் வென்ற யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி. ஆரணிக்கு கல்லூரிச் சமூகத்தால் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று பெற்றது.  குறித்த நிகழ்வானது கல்லூரியின்  அதிபர் திருமதி கௌரி சேதுராஜா தலைமையில், இடம்பெற்றது.  இந்நிகழ்வில்...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நாட்டுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்  வெளியிட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை என்றால், ஒரு வருட காலத்திற்குள் அதனை பங்களாதேஷிற்கு மாற்றியமைக்க முடியும் என சீனா அறிவித்துள்ளது. இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் சீனா கலந்துரையாடல்...

வியாழன், 13 அக்டோபர், 2016

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிராக அதிகரிக்கும் முறைப்பாடுகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும்  போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைப்பாடுகள்  பெண்களிடமிருந்தே மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் செயற்பாடு குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு  பிறப்பித்துள்ளார். கடந்த காலங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில்...

சனி, 8 அக்டோபர், 2016

ஆறு வயது சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் நீர்வேலிப் பகுதியில்  6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டார் என  தெரிவிக்கப்ப ட்டுள்ளது. நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி...

புதன், 5 அக்டோபர், 2016

புலமைப்பரிசில் தரம் 5 பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2016 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வௌியிடப்பட்டுள்ளன.  அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

திங்கள், 3 அக்டோபர், 2016

சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ் மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில்  இடம்பெற்து. 24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை  தேடித்தந்துள்ளனர். அந்த வகையில் கொக்குவில்...

புதன், 28 செப்டம்பர், 2016

எச்சரிக்கை கடற்பிரதேச மக்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!

நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடற்பிரதேசங்களில்  காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.ஆகவே அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள்...

வியாழன், 22 செப்டம்பர், 2016

பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம் !

எதிர்வரும் தினங்களில் கணிதம், விஞ்ஞானம், வணிகம் மற்றும் கலைத் துறை பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆங்கில மொழி டிப்ளோமா தகைமையுடையோரை ஆங்கில ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற பட்டதாரி ஆசிரியர்களின் வெற்றிடம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலே...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

வானில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோன்றிய பிள்ளையார்!

இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில்.05.09.2016..அன்று  பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

தற் போது வடக்கு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ. இரவீந்திரன்  தெரிவித்தார். மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல்...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடம்பெற்ற இருவேறு கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன்...

திங்கள், 5 செப்டம்பர், 2016

அக்கா தங்கைக்கு மட்டக்களப்பில் நடந்த கொடூரம்!!

மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான இவர்கள் யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு...

புதன், 31 ஆகஸ்ட், 2016

காலாவதி ஐஸ்கிறீம் .விற்ற வர்த்தகருக்கு அபராதம்

இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால்  நேற்று  திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்...