இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக