வணக்கம்

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உயிரைக் குடித்த நண்பனுக்கு உயிர் கொடுத்த நண்பன்!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. நண்­ப­னின் வியா­பார நோக்­கம் கருதி ஒரு கோடி ரூபா­வுக்­கும் மேற்­பட்ட பணத்­தைக் கட­னா­கப் பெற்று வழங்­கி­யி­ருந்­தார் என்­றும் அந்­தக் கடன் பணத்தை நண்­பன் திரும்­பித் தரா­த­தால் கடன் தொல்­லை­யால் அவர் உயிர் மாய்த்­தார் என்­றும் விசா­ர­ணை­யில்  தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணப்...

சனி, 5 ஆகஸ்ட், 2017

இலங்கையில் ஆறு மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது. இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து...

வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார்  தெரி­வித்­­த­னர். புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர். “யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச்...

கொடூரமானமுறையில் ஈரானில் ஈழத்து இளைஞர் படுகொலை!

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற ஈழத்து இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவு, அலம்பிள் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம்...

மூதாட்டியை அச்சுறுத்தி உடுவிலில்15 பவுண் நகை கொள்ளை!

உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை...

புதன், 24 மே, 2017

பஸ் கட்டணங்கள் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும்?

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் இவ்வாறு ஜூலை மாதம் கட்டண அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட  உள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். இம்முறை சிறியளவில் பஸ் கட்டணங்கள் உயர்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து...

செவ்வாய், 16 மே, 2017

யாழில் கடன் தொல்லையால் தந்தை தற்கொலை!

குடும்­பத் தலை­வர் ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. கடன்­பட்டு வெளி­நாடு சென்ற தனது மகன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் குறித்த தந்­தை­யார் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வத்­தில் சண்­டி­லிப்­பாய் மாசி­யப்­பிட்­டி­யைச் சேர்ந்த முரு­கேசு தம்­பி­ராசா (வய­துய- 58) என்­ப­வரே...

சனி, 25 மார்ச், 2017

பன்­னா­லை­யில் ஆல­யத்­துக்­குள் வைத்து மது அருந்திய நால்­வர் கைது

தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோயில் ஒன்­றுக்­குள் வைத்து மது அருந்­திய குற்­றச்­சாட்­டில் 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று  பொலி­ஸார் தெரி­வித்­த­னர். “தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த 4 பேரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­னர். நேற்­று­முன்­தி­ன­மி­ரவு அவர்­கள் குறித்த கோயி­லின் உள்ளே இருந்து மது அருந்­தி­யுள்­ள­னர். அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கு் தக­வல் வழங்­கப்­பட்­டது. அங்கு சென்ற பொலி­ஸார் 4 பேரை­யும் கைது  செய்­த­னர்.  அவர்­கள்...

சற்றுமுன்னர் யாழில் கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு  உள்ளானார். முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

செவ்வாய், 21 மார்ச், 2017

ஓட்டோவில் வந்தவர்களால் அளவெட்டியில் ஆடு திருட்டு!

யாழ் - அள­வெட்­டிப் பகு­தி­யில் வீட்­டின் முன்­னால் கட்டி வைத்­தி­ருந்த ஆடு திருட்­டுப் போயுள்­ள­தாக பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்­களே ஆட்­டைத் திரு­டி­னார்­கள் என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாட்­டில்  தெரி­வித்­துள்­ளார். “அள­வெட்டி பன்­னா­லைப் பகு­தி­யில் குட்டி ஈன்று இரண்டு மாதங்­க­ளே­யான  தாய் ஆடு வீட்­டுக்கு முன்­பாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. குட்டி அதன் அரு­கில் விடப்பட்டிருந்தது.20.03.2017...

வியாழன், 2 மார்ச், 2017

தமிழகத்தில்நடன நிகழ்ச்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட, ரத்னம் விதுர்ஷா !!

யாழ். நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் ரத்னம்.விதுர்ஷா தற்பொழுது தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில்  ஒன்றான சீ தமிழ் (zee tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் அறிமுக நிகழ்சி பிரமாண்டமான முறையில் நடை பெற்றது இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான...

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்வதேச தரத்திற்கு யாழிலுள்ள உணவகங்களை மாற்ற முயற்சி ?

யாழில் உள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே எமது  அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் என வடமாகாண சுகாதார  உத்தியோகத்தர் கேசவன் தெரிவித்தார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்  ஜேர்மனின்...

வீட்டு வளவுக்குள்வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த பாரவூர்தி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று வீட்டு வளவுக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளானதில் சாரதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மட்டக்களப்பு, இருதயபுர சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் சுற்று மதிலை உடைத்துக்கொண்டு குறித்த பாரவூர்தி வீட்டு வளவுக்குள் புகுந்துள்ளது இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது இச் சம்பவம் தொடர்பான...

வியாழன், 2 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் வெளிநாட்டவர்களால் பெற்ற இலங்கை!

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல  தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத  அதிகரிப்பாகும். 2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி...

சனி, 21 ஜனவரி, 2017

பலத்த காற்றுடன் யாழ்.குடாநாட்டில் இன்று பரவலாகக் கடும் மழை

யாழ்.குடாநாட்டில் இன்று (21.01.2017) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க  முடிகிறது. கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12...

வெள்ளி, 13 ஜனவரி, 2017

புனரமைக்கப்பட்ட நானுஓயா பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு

நுவரெலியா - நானுஓயாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பொலிஸ் நிலையம் திருத்தியமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பொலிஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் இருந்த போதும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்தது. அதற்கு தேவையான நிதி கடந்த அரசாங்கங்களினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. இந்த நிலையில்...

சத்திர சிகிச்சை உபகரணங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சத்திர சிகிச்சை உபகரணங்கள் நேற்று(12) மாலை 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோட்போர் கூடத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி தனது 20 வருட சேவை நிறைவினை கொண்டாடும் இந்த ஆண்டில் “கூட்டாண்மை சமூக பொறுப்பு” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 15 அரச வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை பிரிவுகளுக்காக 24.3 மில்லியன் ரூபாய்...

திங்கள், 9 ஜனவரி, 2017

பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,

தனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,பிரயாணச் சீட்டுத் தொகையை இரு மடங்காகவும் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இதேவேளை,அண்மையில் இலங்கை...

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் ராகு - கேது, குரு, சனிப்பெயர்ச்சி..!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான  பலன்கள் ஏற்படும். சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில்...