வணக்கம்

வியாழன், 2 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் வெளிநாட்டவர்களால் பெற்ற இலங்கை!

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல 
தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத
 அதிகரிப்பாகும்.
2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 6,980.3 மில்லியன் அமெரிக்க டொலராகும், அது இலங்கையின் பெறுமதியில் 949 பில்லியன் ரூபாவாகும்.
அதற்கமைய 2015 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக