யாழ் - அளவெட்டிப் பகுதியில் வீட்டின் முன்னால் கட்டி வைத்திருந்த ஆடு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்தவர்களே ஆட்டைத் திருடினார்கள் என்று அதன் உரிமையாளர் முறைப்பாட்டில்
தெரிவித்துள்ளார்.
“அளவெட்டி பன்னாலைப் பகுதியில் குட்டி ஈன்று இரண்டு மாதங்களேயான தாய் ஆடு வீட்டுக்கு முன்பாகக் கட்டப்பட்டிருந்தது. குட்டி அதன் அருகில் விடப்பட்டிருந்தது.20.03.2017 திங்கட்கிழமை
பகல் 10 மணியளவில் சாலையால் ஓர் முச்சக்கர வண்டி சென்றது. அந்த நேரம் நாம் வீட்டுக்குள்ளி ருந்தோம். முச்சக்கர வண்டியில் வந்தவரின் நடமாட்டம் அறிந்த அயலவர்கள் எம்மை கூப்பிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்தோம். அந்த நேரம் ஆடு திருடப்பட்டு விட்டது.
அயலவர்கள் கூறுவதன் பிரகாரம் ஓர் பட்டர் கலர் முச்சக்கர வண்டியிலேயே ஆடு கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் பொலிஸார் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
களவாடப்பட்ட தாய் ஆட்டின் இரண்டு மாதக் குட்டி தாயைப் பிரிந்து நின்று கதறுவதை பார்க்கமுடியாது சோகமாகவுள்ளது. எந்த உணவையோ நீரையோ குட்டி அருந்துவதாகத் தெரியவில்லை. இதனால் கத்திக் கத்தியே அதன் உயிரும் பிரிந்துவிடுமோ என்ற
ஏக்கமாகவுள்ளது.
இவ்வாறான பாவங்களை சுமப்பவர்களும் இந்த நாட்டிலேயே உள்ளனர்” என்று ஆட்டின் உரிமையாளர் மனவேதனையுடன்
தெரிவித்தா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக