வணக்கம்

செவ்வாய், 31 மே, 2016

குழந்தை பிறந்த 31 ஆம் நிகழ்வை குடித்துக் கொண்டாடிய தகப்பன் பரிதாப மரணம்!

பிள்ளை பிறந்து 31 ஆம் நாள் சடங்கு நிகழ்வு கொண்டாட்டத்தில் மதுபானத்தை அதிகமாகப் பருகிய தந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழில் இடம்பெற்றது. சங்கானை ஆஸ்பத்திரி வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் அரியநேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தையின் 31 ஆவது நாளை உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடிய தந்தை, இரவு நித்திரையாகிவிட்டார். வழமையாக நித்திரையின் போது...

ஞாயிறு, 29 மே, 2016

கலையிலக்கிய வட்டம் சிவரமணிக்கு கவித்தென்றல்பட்டம்வழங்கப்பட்டுள்ளது

இனிய  நந்தவனம்  பதிப்பகம்  சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா தடாகம்  கலையிலக்கிய வட்டம்  இணைந்து  நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும்  விருதுவழங்கல்  விழாவும் நூல்  வெளியீடும்  நடைபெற்றிருந்ததுஅதில் இலங்கை  திருகோணமலையைச்சேர்ந்த  கவிச்சுடர் சிவரமணிக்கு  கவித்தென்றல்பட்டம் கவித்தென்றல்   என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது  #அவள்ஒரு  தனித்தீவு  நூல்வெளியிட்டமையும்...

புதன், 25 மே, 2016

உழவு இயந்திரம் கிளிநொச்சியில் கிணற்றுக்குள் பாய்ந்தது!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழ்மை) பிற்பகல், கிணற்றினை சுற்றி உழவு செய்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கிணற்றினுள் விழுந்துள்ளது. இதன்போது, சாரதி சிறு காயங்களிற்கு உள்ளான நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டுள்ளதனால்,...

திங்கள், 23 மே, 2016

சில வருடங்களில் கொழும்பு நகரம் நீரில் மூழ்கப் போவதாக எச்சரிக்கை!!

2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர். இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்த...

வெள்ளி, 20 மே, 2016

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழில் சஞ்சீவ தர்மரத்தன நியமனம்?

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக  இடமாற்றப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடந்த ஒருவருடமாக கடமையாற்றியிருந்தார். யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த ஒரு வருடமாக கடமாயாற்றிய டபிள்யு.கே....

வெள்ளி, 13 மே, 2016

வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் உயிரிழந்ததாக?

 வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே நேற்று இவர்கள் மோதுண்டு உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டது. புகையிரதம் வரும் தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இவர்கள் இருவரும் தண்டவாளம் நடுவில் வந்து நின்றுள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கே அவர்கள் அங்கு...

புதன், 11 மே, 2016

யாழில் வாள், கத்தி செய்யும் கம்மாலைக்கு தடை! மீறினால் தண்டனை:

சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம், அவற்றைவைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது.  யாழ் குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன்ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்தஉத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...

ஞாயிறு, 8 மே, 2016

கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்தது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோர்க்கஸ் வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றின் மலசலகூட கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 07.05.2016 அன்று மு.ப – 11-45 மணியளவில் இடம்  பெற்றுள்ளது. குறித்த டிராக்டர் வீட்டு மலசல கூட கழிவுகளை ஏற்றிய பின்பு சாரதியால் டிராக்டரை திருப்ப முனையும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கவனயீனத்தாலே இவ்விபத்து...

வெள்ளி, 6 மே, 2016

மாணவர்கள் வகுப்பை விட்டு கடும் வெயில் நேரத்தில் வெளியேற தடை!

 கடும் வெயில் நேரத்தில் வகுப்பை விட்டு வெளியேற மாணவர்களுக்கு தடை பாடசாலை மாணவர்களை காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளது. நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாகவே இவ் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  ஆராயுமாறு  முன்னர் அறிவுறுத்தியிருந்தார். சுகாதார...

ஞாயிறு, 1 மே, 2016

கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்

யாழ்  தொண்டமனாறு கடற்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை இந்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை கடலுக்கு சென்ற சிலர் கடலில் சடலமொன்று மிதந்து வருவதை அவதானித்ததையடுத்து உடனடியாக அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியிருந்தனர். இந்தநிலையில் கிடைக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த...