வணக்கம்

வெள்ளி, 6 மே, 2016

மாணவர்கள் வகுப்பை விட்டு கடும் வெயில் நேரத்தில் வெளியேற தடை!

 கடும் வெயில் நேரத்தில் வகுப்பை விட்டு வெளியேற மாணவர்களுக்கு தடை
பாடசாலை மாணவர்களை காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாகவே இவ் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  ஆராயுமாறு  முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.
சுகாதார அமைச்சு கல்வி அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கென இரு பரிந்துரைகளாக இவை வெளியிடப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் கதவுகள் ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமான சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறும், மாணவர்களின் வெளிப் பாடவிதான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பாடசாலைகளுக்கு 
 அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கழுத்துப்பட்டி அணிவதைத் தவிர்க்குமாறும் தொப்பி மற்றும் குடை என்பவற்றைப் பயன்படுத்துமாறும் இனிப்பான பாணங்கள் பருகுவதைக் குறைத்து சுத்தமான குடிநீரைப் பருகுவதுடன் குடிநீர் நிரப்பப்பட்ட போத்தலை எப்போதும் உடன் வைத்திருக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை 
இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக