வணக்கம்

திங்கள், 23 மே, 2016

சில வருடங்களில் கொழும்பு நகரம் நீரில் மூழ்கப் போவதாக எச்சரிக்கை!!

2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர்.
இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பலவீனம் காரணமாக கொழும்பு நகரம் நீரில் மூழ்கி அழிவடையும் ஆபத்தை
 எதிர்கொண்டுள்ளது.
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்திருந்தால் களனி கங்கை நிரம்பி பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அவ்வாறான நிலையில் அந்த வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வளங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் முழு கொழும்பும் நீரில் மூழ்கி இருக்கும். நாட்டின் தலைநகருக்கு போதிய பாதுகாப்பின்மையானது, அது பல்வேறு விடயங்களை பாதிப்பை ஏற்படுத்தும். களனி கங்கை கொழும்பினை மூடியிருந்தால் பொருளாதார மையங்கள் தடம்புரண்டிருக்கும். நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சுற்றி ஏற்படுகின்ற காலநிலை மற்றும் அதன் தாக்கம் காரணமாக கொழும்பு நகரத்தின் ஆயுட்காலம் குறைவடையும் அபாய நிலையை எட்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 
எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமைகளுக்கு அமைய 2100ம் ஆண்டளவில் கொழும்பு நகரத்தின் ஒரு பகுதி கடலினால் மூழ்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சர்வதேச மட்டத்திலான ஆய்வு முடிவுகளும் உறுதி
 செய்துள்ளது.
முறையற்ற நகர்புற அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழலை கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக இயற்கைப் பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையினை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
களனி கங்கையின் நீர் போக்குவரத்து முழுமையாக கொழும்பிற்கு செல்ல இடமளிக்காமல் அவிசாவளை அல்லது குருவிட்ட ஆகிய பிரதேசத்திற்கு அருகில் அல்லது குருணாகல் ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்கு திருப்புவதற்கான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான மாற்றும் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையை காப்பாற்றும் வழிமுறையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்படாத பிரதேசங்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது தான் பிரதான காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 
தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அனர்த்தங்களின் அதிர்வெண்களும் அதிகரிப்பட்டுள்ளது. மொத்தமாகவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு இரண்டு முறை வெள்ள அனர்த்தம் அல்லது மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படுவதோடு அதில் முழு மக்களிலும் ஏறத்தாழ பாதியளவிலான மக்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வருடமும் வறட்சியான நிலையில் காணப்படுகின்ற போதிலும் அது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே
 பாதிக்கின்றது.
இலங்கைக்கு தேவையான நீர், மலையக பிரதேசங்களில் சேமிக்கப்படுகின்றமையே அந்தப் பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான நீர் நிலைகளை உலர் வலயங்களில் சேமித்து வைக்க வேண்டும் என தற்போதைய புவியியல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சமநிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக உத்ரா துருவத்தில் பனி உருக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதன் தாக்கம் காரணமாக 23 டிகிரி அளவில் பூமி சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பூமி தட்டில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கமைய அடுத்த நூற்றாண்டில் நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக