யாழ் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று சனிக்கிழமை(26.9.2015) இடம்பெற்ற போது சன நெரிசலைப் பயன்படுத்தி அடியார்களின் தங்க ஆபரணங்கள் களவாடிய ஆறு பெண்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 16 தங்கஆபரணங்கள்
மீட்கப்பட்டுள்ளன.
தங்க ஆபரணங்கள் அபகரிப்புக் குறித்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்துத் தீவிர விசாரணைகளில் இறங்கிய பொலிசார் ஆறு பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவையும்,மூவர் நீர்கொழும்பையும் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 16 தங்க ஆபரணங்கள் பொலிசாரினால் துண்டுகளாக
மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் ஆலயத்தில் தங்க ஆபரணங்களைப் பறிகொடுத்தவர்கள் பருத்தித் துறைப் பொலிஸ் நிலையத்தில் ஆதாரங்களைக் காட்டிச் சட்ட நியதியின் படி பெற்றுக் கொள்ள முடியுமெனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் இயன்றவரை தங்க நகைகள் அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக