தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில வந்த ஒன்பது பேர், தந்தையார்களின் கடைகளில் நின்ற பாடசாலை மாணவர்கள் இருவரையும் வெட்டி காயப்படுத்தியதுடன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார், சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றரில் கடமையில் ஈடுபட்டு இருக்கக் கூடியதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் நகரப்பகுதியில் பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள கண்ணதாசன் பன்சி ஹவுஸ் மற்றும் அருகாமையில் உள்ள சித்தி விநாயகர் பன்சி ஹவுஸ் ஆகிய கடைகளில் நின்ற மாணவர்களான கண்ணதாசன் கோகுலதாசன் (வயது 18) மற்றும் பத்மசீலன் விதுசன் (வயது 18) என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் சுன்னாகம் நகரப் பகுதயில் உள்ள வர்த்தகர்களுக்கு இடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில மாதங்களாக இத்தகைய சம்பவங்கள் குறைவடைந்து காணப்பட்ட போதிலும் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஏற்னவே இத்தகைய குற்றச் செயலகள் சம்பந்தமாக விளக்கமறியலில் இருந்தவர்கள் சிலர் வெளியில் வந்துள்ளதாகவும்
பொதுமக்கள் கருத்து வெளியிட்டனர்.இந்தநிலையில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பரவலாக பொது மக்களினால் பேசப்படுகின்றது-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக