வணக்கம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது

வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்த போது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது. மேலும் பல பொருட்கள் களவு போய் இருக்கலாம்...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆலயத்தில் தங்க ஆபரணங்கள் திருடிய ஆறு பெண்கள் கைது

யாழ் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று சனிக்கிழமை(26.9.2015) இடம்பெற்ற போது சன நெரிசலைப் பயன்படுத்தி அடியார்களின் தங்க ஆபரணங்கள் களவாடிய ஆறு பெண்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 16 தங்கஆபரணங்கள்  மீட்கப்பட்டுள்ளன. தங்க ஆபரணங்கள் அபகரிப்புக் குறித்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்துத் தீவிர விசாரணைகளில்...

புதன், 23 செப்டம்பர், 2015

.கீரிமலையைச் சேர்ந்த பெண்ணைக் காணவில்லை

யாழ் புதிய கொலனி கீரிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவரது உறவினர்கள், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். அன்ரன் ஜயக்கோன் சிவகௌரி (வயது 36) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் அங்கும் செல்லவில்லை. அலைபேசிக்கு...

திங்கள், 21 செப்டம்பர், 2015

இளைஞர் கும்பலால் மாணவர்கள் இருவர் மீது வாள் வெட்டு`?

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். மூன்று மோட்டார் சைக்கிள்களில வந்த ஒன்பது பேர், தந்தையார்களின் கடைகளில் நின்ற பாடசாலை மாணவர்கள் இருவரையும் வெட்டி காயப்படுத்தியதுடன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.  சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார், சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றரில் கடமையில்...

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நல்லைக்கந்தன் உற்சவத்தில் ரூ. 14.6 மில்லியன் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர், இன்று திங்கட்கிழமை (14) தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம் கேட்டவர்களுக்கு கடைகளுக்கான இடங்கள் கொடுக்கப்பட்டன. இதனடிப்படையில்...

சனி, 12 செப்டம்பர், 2015

தங்கையின் கணவரை அக்காவும் தம்பியும் சேர்ந்து எரித்துள்ளனர் ?.

ந்தளாய் பிரதேசத்தில் மண்ணெண்ணை ஊற்றி ஒருவரை எறித்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் பொலிஸார் இருவரை இன்று சனிக்கிழமை(12) காலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பேராறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) இரவு இந்த எரிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தொரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் அக்காவும் தம்பியும் என்பதோடு சந்தேக நபர்களின் தங்கையின் கணவரேயே இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றி எறித்துள்ளதாகவும்...

வியாழன், 10 செப்டம்பர், 2015

சகோதரனை 8 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சகோதரி

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் 7 வயது சகோதரனை 11 வயது பழங்குடியின சிறுமி மாலதி கழுத்தில் வைத்து சுமந்து மருத்துவமனைக்கு  அழைத்து சென்று உள்ளார். சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு வரையில் சகோதரனை சுமந்து செல்லும் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது. 7 வயது சிறுவனுக்கு உலகில் யாருக்கும்  எளிதாக கிடைக்காத அன்பு அதிகமாக கொண்ட சகோதரி கிடைத்து உள்ளார்.   மாலதியின் சகோதரன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல்...

திங்கள், 7 செப்டம்பர், 2015

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து எமதுயாழ் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு  வருகைதந்து எமது மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணங்களை  வழங்கி உதவிதந்த சமூக சேவையாளர் நவரத்தினராசா ஜெயகோபாலுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோாம்.. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

சனி, 5 செப்டம்பர், 2015

என் மகள் தூங்கும் முன் என்னிடம் கேட்டாள்???.

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா...

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

உயர்தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பலி

மல்லாவியைச் சேர்ந்த மாணவன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் பலியாகியுள்ளார். இன்று மதியம் 12.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மல்லாவியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) என்ற மாணவனே உயிரிழந்தார். இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவிருந்த புவியியல் பாடத்துக்குத் தோற்றுவதற்காக சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுள்ளார்கள். இந்த நேரம் ஓட்டங்குளம் சந்தியில் குறுகிய தூர சேவையில்...

புதன், 2 செப்டம்பர், 2015

விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சற்றுமுன்னர் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடிப்போக்கு சந்தியில் விசேட அதிரடிப்படையினரின வாகனம் ஒன்று, மோட்டார்சைக்கிளில் சென்றவரை பந்தாடியதில் விபத்து நேர்ந்துள்ளது.இந்த பகுதியில் அண்மையிலும் விபத்து நேர்ந்தது  குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...