வணக்கம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சிங்கள பொலிஸார்தமிழ் மொழி டிப்ளோமாதேர்வுக்கு இணைவு

இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து
 கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில் 
ஆரம்பமானது.
5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர் கல்லூரியிலிருந்து 1400 சிங்கள பொலிஸ்
 உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேற்யுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸ்ஸாநாயக தமிழ் கற்கை நெறிக்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜினதாச உட்பட பலர் கலந்து 
கொண்டனர்.
மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக