கடற்பகுதியில் இருந்து சுமார் 4400 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோர காவற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை இத்தாலிய கடலோர காவற்படையினர் உத்தியோகபூர்வமாக இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் குறித்த
குடியேற்றவாசிகள் வந்திறங்கியதாகவும் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே வந்திறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 2000 க்கும் அதிகமானோர் இவ்வாறு சட்டவரோதமாக சிறிய கப்பல்களில் பயணித்து வரும் பொழுது உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு வரும் குடியேற்றவாசிகளே அதிகம் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து
தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக