வணக்கம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சிங்கள பொலிஸார்தமிழ் மொழி டிப்ளோமாதேர்வுக்கு இணைவு

இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து  கொண்டனர். மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில்  ஆரம்பமானது. 5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர்...

செல்வச் சந்நிதி முருகனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தீர்த்ததிருவிழா  இன்று சனிக்கிழமை(29.8.2015)அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்ததிருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்றனர்.தீர்த்ததிருவிழாவில் தொடர்ந்து பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றது. யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பாடசாலையின் காமுக அதிபரை பொலிஸார் தேடுகின்றனர் !

    புத்தளம் நகரில் பிரபல பாடசாலையொன்றின் முன்னாள் அதிபர் , அதே பாடசாலையில் கற்கும் மாணவியொரை துஷ்பிரயோகத்துகுட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அயலவரொருவரே சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு இம்முறைப்பாட்டை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அம் மாணவி மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியொருவரே மருத்துவ...

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள்.???

கடற்பகுதியில் இருந்து சுமார் 4400 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோர காவற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். குறித்த தகவலை இத்தாலிய கடலோர காவற்படையினர் உத்தியோகபூர்வமாக இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் குறித்த  குடியேற்றவாசிகள் வந்திறங்கியதாகவும் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே வந்திறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 2000 க்கும் அதிகமானோர் இவ்வாறு சட்டவரோதமாக சிறிய...

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

விளக்கு தீயில் எரியுண்ட இளம்பெண் சாவு..!!

குப்பி விளக்கு தட்டுப்பட்டு எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில்  இன்று உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த பச்சிளம் குழந்தையின் தாயான ஜதீசன் தமிழினி (வயது 22) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு வேலைக்கு சென்று  விட்டு வந்த கணவன் உறக்கத்தில் இருந்த அவரை அழைத்தார் எனவும் அந்தநேரம் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது...

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார்.

பெங்களூர் அருகே பாறை மீது நின்று ‘செல்பி‘ படம் எடுக்க ஆசைப்பட்டு  அருவியின் தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார்.  குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுனில் நேருநகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 24). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான பிரதீப் நேற்று  தனது நண்பர்கள் 5 பேருடன் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே உள்ள சேலாவரா அருவிக்கு  சுற்றுலா சென்றார். அப்போது பிரதீப்...

புதன், 12 ஆகஸ்ட், 2015

துப்பாக்கி முனையில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வர்கள் கைது???

பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைதுசெய்து உள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு  ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகி உள்ளது. 21 பேர் அடங்கிய கும்பலானது இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான...

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நீச்சலடிக்க சென்ற பெண்னின் கை முதலையின் வாயில்

அமெரிக்காவில் தனிமையில் நீச்சலடிக்க விரும்பிய பெண் முதலையிடம் சிக்கி தனது கையை பறிகொடுத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள வெகிவா நதியில் நீச்சலடிப்பதற்காக பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த தனிமை விரும்பியான இவர், ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுள்ளார், அங்கு நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று இவரது கையை கடித்திருக்கிறது. முதலையுடன் நடந்த போராட்டத்தில்...

அசனத்திகாக ரயில் பெண்கள்:ஆடைகளை கிழித்துகலட்ட.காணொளி

சீனாவில் மெட்ரோ ரயிலில் இடம்பிடிப்பதற்காக இரண்டு பெண்கள் ஆடைகளை கிழித்து சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனா தலைநகர் பீஜிங்கின் மெட்ரோ ரயிலில் இரு பெண்கள் பயணித்துள்ளனர், அப்போது ஒரு இருக்கை காலியானபோது அதில் அமர்வதற்கு இவர்கள் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டை, சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறி இருவரும் மாறி மாறி ஆடைகளை கிழித்துக்கொண்டனர், இவர்கள் இருவரையும் சகபயணிகள் விலக்கிவிடாமல் அருகில்...

குழந்தைகளுக்கு தாய்கள் இல்லாத :அவலநிலை???

சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது. மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்("motherless village" ) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் 132 குழந்தைகள் வசிக்கின்றனர், மேலும் அனாதையாக தவிக்கும் இக்குழந்தைகள் மனநிலை பிரச்சனை மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும்,...

சட்டப்படிபதினெட்டு வயதுக்குக் குறைந்த திருமணம் செல்லுபடியாகது

கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது,  காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார். இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள...

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

மாணவி தற்கொலை அனுமதி அட்டை வழங்கப்படாமையே காரணமாம்

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வேப்பங்குளம் பகுதியில்உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உ/த பரீட்சையில் தோற்ற இருந்த நிலையிலேயே கிணற்றுள் குதித்து தற்கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த மாணவி கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில்...

புலனாய்வாளர்கள் அதிகரிப்பு மக்கள் அச்சம்???

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் பட்டிப்பழை பிரதேசங்களில் புலனாய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தலைமையகத்தின் உத்திரவின் பேரில்  அதிக அளவான இராணுவ புலனாய்வாளர்கள் இந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த பிரதேசங்களில் பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்தலை காரணம் காட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதனால் பிரதேசங்களின் மக்கள்...

சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் கந்தளாயில் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பகுதியிலுள்ள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து குறித்த வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். வாக்குச் சீட்டை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு பிரதான அரசியல் கட்சியொன்றின் திருகோணமலை வேட்பாளர் ஒருவருக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம்...

புதன், 5 ஆகஸ்ட், 2015

அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளை

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று,04.08.2015. அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பனவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சங்கிலிகள், இரண்டு சோடி தோடுகள் காப்புகள் மற்றும்...

சனி, 1 ஆகஸ்ட், 2015

குட்டி தேவதைக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் தங்ககை:.காணொளி .

பிரித்தானியாவை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனையான ரெபக்கா தன்னுடைய குட்டி மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது. பிரித்தானியாவை சேர்ந்த ரெபக்கா அட்லிங்டன் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் 400 மீற்றர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். இந்த தங்க மங்கைக்கு கடந்த யூன் மாதம் 6 ஆம் திகதி, பெக்கி அட்லிங்டன் என்ற ஒரு அழகான குட்டி தேவதை பிறந்தது. மூன்றரை வாரமே ஆன...