யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ் நகரிலுள்ள மகாநதி நகைமாட உரிமையாளரால் ஐந்த இலட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை பாடசாலையின் அதிபர் மகேந்திரராசா மற்றும் மேற்படி நகைகக் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து
திறந்து வத்தனர்.
பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அபிசேக ஆராதனை வழிபாடுகளின் பின்னர் இச் சிலை உத்தியோகபுர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் இந்து மகளீர் கல்லூரி அதிபர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர். மாணவர்கள் எனப் பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக