வணக்கம்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

ஆவரங்கால் பாடசாலை அதிபரின் கீழ்த்தரமான செயல்

ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான கணக்கை காட்டியதாக பாடசாலை நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவர்களால் வாங்கப்பட்ட காணிக்கும் அவர்களால் செய்யப்படட வேலைகளுக்கும் இந்த பத்து லட்சத்திலேயே கணக்கு காட்டப்பட்டிருப்பதாக மேலும்
 தெரிவிக்கின்றனர்.
முன்னரும் பாடசாலை பணத்துடன் முரண்பாடுகளை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலமுறை கணக்கு வழக்கு கேட்டும் தெரிவிக்காத இந்த அதிபர் குறித்து, யாழ்ப்பாண கல்வித் திணைக்களமே இதற்கான உண்மைத்தன்மையை அறியத்தரவேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே தமக்கு இருப்பதாக இந்த பாடசாலையின் நலன்விரும்பிகள்
 தெரிவிக்கின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக